டிஜிட்டல் சினிமாவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. பல புதிய கேமராக்களின் வரவு அதற்கு மேலும் வலு சேர்க்கின்றன. 1080p, 2K, 4K, 5K, 6K எனும் அடிப்படையில் விரியும் அதன் தரம் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடுகள் உயர்ந்துகொண்டேபோகின்றன. RED Camera அதன் ‘6K RED DRAGON sensor’-ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் தன் தரத்தை உயர்த்தியிருக்கிறது. மறுபுறம் CANON தன்னுடைய 'EOS 5D Mark II' கேமராவின் அடுத்தப்பதிப்பாக 'EOS 5D Mark III'-ஐ கொண்டுவந்திருப்பதை நாம் அறிவோம். மேலும் EOS C100, Canon C300, EOS C500, EOS-1D C எனப் பல கேமராக்கள்





